Homeசெய்திகள்சென்னைரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி - முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

-

- Advertisement -

தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக சோ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனா். ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி - முதல்வருக்கு தலைவா்கள் பாராட்டு

மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள், நீதிபதிகள், ஏராளமான வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உருவாக, அவர்கள் தங்கி படித்து வெற்றி பெற தாய் மடியாக இருந்த, அவர்கள் அனைவருக்கும் முகவரி கொடுத்த சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா அனைத்து கல்லூரி நவீன மாணவர் விடுதியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின், உயர்கல்வி கனவினை நனவாக்கும் பொருட்டு, விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 121 அறைகளோடு கூடிய 500 மாணவர்கள் தங்கி பயில நவீன வசதியான நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சி கூடம், உள்ளரங்கு விளையாட்டு கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய நவீன விடுதியை ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை, சமத்துவ நாளான சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்“ என்று கூறியுள்ளனா்.

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

MUST READ