Homeசெய்திகள்சினிமாதனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... 'குபேரா' படத்தின் அசத்தல் அப்டேட்!

தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. ‘குபேரா’ படத்தின் அசத்தல் அப்டேட்!

-

- Advertisement -

குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... 'குபேரா' படத்தின் அசத்தல் அப்டேட்!

தனுஷின் 51வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... 'குபேரா' படத்தின் அசத்தல் அப்டேட்! அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. நடிகர் தனுஷும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ராஷ்மிகா, நாகார்ஜுனா ஆகியோரும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் இன்று (ஏப்ரல் 15) முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.

MUST READ