Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

-

- Advertisement -

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

ஏப்ரல்-14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தமிழ் மொழியில் உருவாகியுள்ள சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எஸ்.கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ருத்ரன்’ ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

இப்படத்தில் லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர் மற்றும் சச்சு ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பாபு யோகிஸ்வரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதியன்று ‘தமிழரசன்‘ படம் வெளியாகவுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, சோனு சூட், சுரேஷ் கோபி, யோகி பாபு மற்றும் சங்கீதா க்ரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மலையாள இயக்குனரான ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகி பாபுவை வைத்து ‘யானை முகத்தான்‘ எனும் படத்தை இயக்கியுள்ளார், இப்படம் ஏப்ரல்14-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

இப்படத்தில் உதய் சந்திரா, கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பெரேடி போன்ற பலர் நடித்துள்ளனர். மனிதனுக்கும், கடவுளுக்குமான பிரச்னையை கூறும் விதமாக நகைச்சுவையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் ஏப்ரல்-14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படத்தில் லட்சுமி ப்ரியா, கருணாகரன், தீபா சங்கர், தென்றல், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்-2’ படம் ஏப்ரல்-14ம் தேதியன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!

மே 12ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் யோகி பாபு, காவ்யா, ஜான் விஜய், மன்சூர் அலிகான் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

MUST READ