Homeசெய்திகள்உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பேன் – திலகபாமா

உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பேன் – திலகபாமா

-

- Advertisement -

பாமக பொருளாளர் திலக பாமா சமூக வலைதளத்தில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பேன் என பதிவிட்டுள்ளார்.என் உயிரைக் கொடுத்தாலும் உன் உரிமைகளைப் பாதுகாப்பேன் - திலகபாமாபாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, செயல்தலைவராக ராமதாசால் அறிவிக்கபட்டார். இதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்ட 10 ஆம் தேதி அன்றைய தினமே அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா சமூக வலைதளத்தில் பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாசின் பதிலுக்காக காத்திருப்பதாக பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் சந்திக்க வந்த திலகபாமாவை மூன்று மணி நேரம் காக்க வைத்து பார்க்காமலையே திருப்பி அனுப்பினார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டி தன்னை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், தான் தான் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு, மே 11 ஆம் தேதி நடைபெறும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டு திடல் பணிகளை அன்புமணி பாரவையிட்டார்.

இந்நிலையில் நான்காவது நாளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் நெஞ்சியிலையே வஞ்சக எண்ணத்தோடு பாமகவில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட திலகபாமாவை கண்டிப்பதாகவும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் கட்சியில் பணியாற்றி திலகமா ஒரு வெளியிலிருந்த வந்த நோய்க்கிருமி, அவர் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும் இல்லையெனில் கட்சியிலிருந்து விலக வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், பாமக பொருளாளர் திலகபாமா சமூக வலைதளத்தில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பேன் என பதிவிட்டுள்ளார்.

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

 

MUST READ