Homeசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்வு குறித்து கோரிக்கை

மீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்வு குறித்து கோரிக்கை

-

- Advertisement -

மீன்பிடித்தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நாள் ஒன்றுக்கு 131 ரூபாய் 15 காசு உயர்த்தி 500 ரூபாய் என முப்பதாயிரம் ரூபாய் வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மீன்பிடித்தடைகால உதவித்தொகை உயர்வு குறித்து கோரிக்கைதமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை விதித்து வெளிநாட்டு கப்பலுக்கு மீன் பிடிக்க அனுமதி கொடுப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர். நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றால் இந்திய கடலோர காவல் படை விரட்டி அடிப்பதால் வயிற்றுப் பிழைப்புக்காக செல்லும் நாட்டுப் படகு மீனவர்கள் வயிற்றில் அடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரையில். ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதித்துள்ளது.  61 நாட்கள் நீடிக்கும் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய 8000 ரூபாய் உதவிதொகையை உயர்த்தி 30,000 வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை காசிமேட்டில்  மீனவர்கள் செய்தியாளர்களுடன் பேசிய போது ஏப்ரல் 15 தேதி  நள்ளிரவில் தொடங்கி ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க  ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என கூடாது என தடை விதித்துள்ளது.  இந்த தடையின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 14  கடலோர மாவட்டங்கள் பாண்டிச்சேரி காரைக்கால் உட்பட பதினாறு கடலோர மாவட்டங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கக்கூடிய. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன் பிடிக்க செல்லாது.

இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு இன்ற நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். 50 லட்சம் மீனவ குடும்பங்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. சுமார் ஒரு கோடி பேர் மீன்பிடி தடை காலத்தால் பாதிக்கப்படுகிறார்கள் .இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  இதனால் மீன்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

மீன் பிடி தடை காலத்தில் எங்களுக்கு தடை விதித்து விட்டு வெளிநாடு கப்பல்கள் இந்திய கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க கூடாது.  அதேபோன்று பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்வதற்கு தடையில்லை என்ற நிலையில் இந்திய கடலோர காவல்படை மீன் பிடிக்க செல்பவர்களை தடை செய்யக்கூடாது. தமிழகத்தில் உள்ள 14 கடலோர  மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் சென்னையில் உள்ள மீன்வர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பக்கத்தில் ஆந்திரா இருப்பதினால் அங்கு செல்லும் பொழுது  கடலோர காவல்  படயினரால் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். வயிற்று பிழைப்பிற்கு மீன் பிடிக்கப் போற எங்களை இந்த நேரத்தில் சிறுபடகுகளை வைத்து சம்பாதிக்கின்ற நேரம் அதனால் கடலோர காவல் படை மீன்பிடிக்க அனுமதி தர வேண்டும். மீன் பிடிக்க செல்பவர்களை  தடுக்காமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

மாநில அரசு மீனவர்களின் குடும்பத்துடைய ரேஷன் கார்டுக்கு ஒரு ஆளுக்கு 8000 ஆயிரம் ரூபாய், உதவித்தொகை வழங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 131 .15 காசு கொடுக்கிறார்கள் இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். அதனால் அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போகிறவர்களுக்கு 500 ரூபாய்  வழங்குவது போல் மீன் பிடி தடைக் காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்.

61 நாளைக்கு முப்பதாயிரம் ரூபாய் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி அந்நிய செலவானி ஈட்டி கொடுக்கக்கூடிய  மீனவர்களின் விசைப்படகுகள் பராமரிப்பதற்கு விசைப்படகு உரிமையாளருக்கு பராமரிப்பு செலவாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும் எனக கோரிக்கை வைத்துள்ளனர்.

22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி புகார் – விசாரணை ஒத்தி வைப்பு

MUST READ