நடிகர் சந்தானம் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காமெடியனாக களமிறங்க இருக்கிறார்.
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், ரவி மோகன், சிம்பு என பல டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதே சமயம் இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படம் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நான் கடந்த 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சுந்தர். சி, விஷால் கூட்டணியில் வெளியான இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்த பலரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வரவேண்டும். அவரை ஒரு காமெடியனாக மிஸ் பண்ணுகிறோம் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதேசமயம் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் STR 49 திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது. தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் ரூ. 13 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டு, முன் பணமாக ரூ. 7 கோடி கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சிம்பு – சந்தானம் காம்பினேஷனில் வல்லவன், வாலு, சிலம்பாட்டம், வானம் ஆகிய படங்கள் வெளியான நிலையில் தற்போது STR 49 திரைப்படத்திலும் இந்த காம்போ இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. STR 49 படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப் போகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.