ஜீனியாக மாறும் ஜெயம் ரவி🧞‍♂️… ஜோடியாக நடிக்கும் தெலுங்கு சென்ஸேஷன் நடிகை!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அகமது இயக்கத்தில் ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெயம் ரவி புகைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு சென்சேஷனல் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறாராம். இயக்குனர் மிஷ்கினிடம்  உதவி இயக்குனராக பணியாற்றிய புவனேஸ் அர்ஜுனன் என்பவர் இந்தப் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறாராம்.

படத்திற்கு ஜீனி(Genie) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படம் குறித்த அதிகாரப்பூர் அப்டேட் விரைவில் வழியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீனி(Genie) என்ற தலைப்பால் இந்தப் படத்தில் ஜெயம் ரவி பூதமாக நடிக்கலாம் என்றும் ஃபேண்டஸி படமாக உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement