கார்த்திக் சுப்பராஜ் ஆரம்பத்தில் வித்தியாசமான குறும்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படம் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
கங்குவா திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இன்னும் சில பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ரெட்ரோ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “நடிகர் விது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது அவர் ‘ரெட்ரோ’ படத்தின் வில்லன்களில் ஒருவர். இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சட்டானியாவாக நடித்திருந்தார். அவருடைய கேரக்டரை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு உற்சாகமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -