சூர்யா 45 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி, சூர்யா கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படம் நடிகர் சூர்யாவின் 45ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ், யோகி பாபு, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, இதில் வில்லனாக நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இன்று முதல் (ஏப்ரல் 22) 5 நாட்களுக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.