கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர், சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் சூர்யாவின் 44 வது படமாகும். இதனை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் வேறொரு நடிகருக்காக எழுதப்பட்டது என்று கூறியுள்ளார். அதன்படி அவர், “இந்த ஸ்கிரிப்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டது. இந்த படத்தில் ஆக்ஷன் அதிகம் இருக்கும். ஆனால் இது எனக்கு ஒரு காதல் கதை போல தோன்றியது. அதனால் வேறொரு நடிகருடன் அதை செய்ய முடிவு எடுத்தேன். சூர்யா சார் என்னிடம் ஒரு கதையைக் கேட்டபோது. இந்த கதை சரியானதாக இருந்தது. சூர்யா சார் முதல் டிராப்டை படித்துவிட்டு, இதை நீங்கள் தலைவரிடம் சொன்னீர்களா? ஏனென்றால் தலைவர் ஸ்டைல் ஸ்கிரிப்ட் போல் தெரிகிறது” என்று சூர்யா தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.