குட் பேட் அக்லி பட நடிகர், நடிகையிடம் அத்துமீறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழிலும் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித், ஆதிக் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர் மலையாள நடிகை வின்சியிடம் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறியதாக, நடிகை வின்சி மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்து இருந்தார். அதே சமயம் வீடியோ ஒன்றிடையும் வெளியிட்டு ஷைன் டாம் சாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் எனவும் கூறியிருந்தார். இது தவிர ஷைன் டாம் சாக்கோவின் மீது போதைப்பொருள் வழக்கு பாய்ந்தது. அதன்படி சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. இந்த நிலையில் தான் நடிகை வின்சியிடம், ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்படி, “நான் எந்த உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை. நான் பேசும் பாணியே அப்படித்தான் இருக்கும். ஆனால் இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.