Homeசெய்திகள்இந்தியாபாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

-

- Advertisement -

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவுஇந்தியாவுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க போவதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை பாகிஸ்தான் விதித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற வேண்டும் என்றும், இந்தியாவுடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துக்களையும் தடை செய்வதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுடனான வா்த்தகத்துக்கும் முழுமையாக தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை மற்றும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா வெளியிட்ட அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு எதிா்ப்பு தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்குள் பாயும் நதிநீரை இந்தியா தடுத்தால் அதனை போா் நடவடிக்கையாக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

 

MUST READ