கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ், பூஜா ஹெக்டே, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் பிரபல நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமாரும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சிவகுமார், “தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக சூர்யா தான் சிக்ஸ் பேக் வைத்தார். சூர்யாவிற்கு முன்பு சிக்ஸ்பேக் வச்ச நடிகர்கள் யாருமே இல்ல. கார்த்தி கூட வைக்கல” என்று தன் மகனைப் பற்றி பெருமையாக பேசியிருந்தார். இதைக் கேட்ட சூர்யாவும் மேடையின் கீழ் இருந்து கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வந்தது. அதேசமயம் சிவகுமாரையும், சூர்யாவையும் பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் விஷால், தனுஷ் போன்றவர்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார்கள். ஆனால் சிவக்குமார் சூர்யா மட்டும்தான் தமிழ்நாட்டிலேயே சிக்ஸ் பேக் வைத்த முதல் ஆள் என்று பேசியது பலரையும் விமர்சிக்க வைத்தது. இது ஒரு பக்கம் இருக்க, சூர்யா முதன்முதலாக சிக்ஸ் பேக் வைத்து நடித்த வாரணம் ஆயிரம் ரிலீஸானா அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் விஷாலின் சத்யம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் விஷால் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். ஆகையினால் தமிழ்நாட்டில் சூர்யாவிற்கு முன்பாக விஷால் தான் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என விஷால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
#Vishal Recent Interview
– #Dhanush first showed off his six pack abs in the movie #Polladhavan directed by #VetriMaaran.
– Only after that did I get a six pack.
pic.twitter.com/3wwT82JtUY— Movie Tamil (@MovieTamil4) April 24, 2025
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய விஷால், “முதலில் சிக்ஸ் பேக் வைத்தது தனுஷ் தான். ஏனென்றால் 2007 ஆம் ஆண்டில் அவருடைய பொல்லாதவன் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு தான் நான் சத்யம், மதகஜராஜா ஆகிய படங்களில் சிக்ஸ் பேக் வைத்தேன். அவர்கள் மறந்து கூட அப்படி சொல்லி இருக்கலாம்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.