பசுவை மீட்ட அமைச்சர் நாசர் – மீண்டும் ட்ரெண்டிங்
சாலையில் வலியில் துடித்த பசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.
ஆவடியில் சாலை விபத்தில் சிக்கிய பசு மாட்டை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆவடி, திருமுல்லைவாயில் சுற்றுவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே பசுமாடு ஒன்று சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் துடித்துக் கொண்டு இருந்தது.
இதனை கண்ட அமைச்சர் நாசர் காரை உடனடியாக நிறுத்திவிட்டு அருகே சென்று பார்த்தார். பசு மாட்டிற்கு காயம் ஏற்பட்டு இருந்தது. இதனை அடுத்து உடனடியாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார்.
பின்னர் பசுவிற்கு உடல் ரீதியாக எவ்வித முன்னேற்றமும் காணப்படததால் உடனடியாக பசுவை அவ்வழியாக வந்த வாகனத்த்தில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஏறக்குறைய 2 மணி நேரமாக அமைச்சர் பசுவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக சமூக வலைதளத்தில் வராமல் இருந்த அமைச்சர் மீண்டும் ட்ரெண்டாகி உள்ளார்.