அன்புள்ள எருமைகளே… ரயில் பாதைக்கு வரவேண்டாம்!
எருமைகள் ரயில் பாதைக்கு வர வேண்டாம், பிரதமர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் என பி.ஆர்.எஸ். கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடி செகந்திராபாத் – திருப்பதி ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிலையில் ஆளும் பி.ஆர். எஸ். கட்சி தலைவர் சதீஸ் ரெட்டி எருமைகள் ரயில் பாதைக்கு அருகில் வர வேண்டாம் என்று வலியுறுத்தி, சுவரொட்டிகளுடன் எருமை மாட்டிற்கு காண்பித்து நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுவரொட்டியில், “அன்புள்ள எருமைகளே, மோடி வந்தேபாரத் எக்ஸ்பிரஸைத் தொடங்கி வைக்கிறார். தயவு செய்து ரயில் பாதைக்கு அருகில் வராதீர்கள்!” என எழுதப்பட்டிருந்தது. அந்த சுவரோட்டியுடன் எருமை மாட்டின் மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரயில் புகைப்படத்துடன் எதிர்பை தெரிவித்தனர்.