- Advertisement -
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். பல நாட்களாக கிடப்பிலிருந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6 ஆம் தேதியே மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் சட்டப்பேரவையில் அது மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசு திருத்தம் நிறைவேற்றியதை தொடர்ந்து தற்போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.