Homeசெய்திகள்தமிழ்நாடு2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

-

- Advertisement -
kadalkanni

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராஜ். இவரது மனைவி சூர்யா (32). இவர்களுக்கு லக்சன் (4), உதயன்(1) இன்று இரண்டு மகன்கள் உள்ளனர். சின்ராஜ் கனலாபாடி ஊராட்சி செயலாளராகவும், சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும் பணியாற்றி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி ஆகியோரிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சின்ராஜ் தனது நண்பர் திருமணத்திற்காக திண்டிவனம் சென்று விட்டு இரவு 12 மணிக்கு வீடு திரும்பிய பொழுது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது தனது மனைவி மற்றும் இரு மகன்கள் இல்லாமல் அறையும் திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ராஜ் தனது உறவினர்களுடன் கிராம மக்கள் உதவியுடன் கிராம முழுக்க தேடி அலைந்த நிலையில், கிணற்றின் அருகே செல்போன் ஒலிப்பதை கண்டு கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்குவந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் கிணற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், சூர்யா மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 1 வயது கொண்ட உதயன் உடலை தீயணைப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரமாக கிணற்றில் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் சின்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் இரண்டு மகன்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ