Homeசெய்திகள்தமிழ்நாடுகொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா 

கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா 

-

- Advertisement -
கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா
சிவகங்கை மாவட்டம் எஸ்.புத்தூர் அருகே முத்தாளம்மனை வேண்டி ஆட்டம் ஆடி கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா 

பங்குனி பொங்கல் விழாவை ஒட்டி அம்மன்செட்டி குறிச்சி அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மனப்பட்டி, செட்டிகுறிச்சி, உத்தம்பட்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டி திருவிழாவை தொடங்கினர்.

அதனை தொடர்ந்து நாள்தோறும் இரவில் ஆண்கள் மரக்குச்சிகளை கையில் வைத்து அடித்து கொண்டு ஆடும் வைந்தானை ஆடியும் மக்கள் குமியடித்து கொண்டாடியும் 8 ஆம் நாளில் வீட்டுவாசலில் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் கொண்டாடினர்.

கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா 

9ஆம் நாள் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் வைந்தனை அடிக்க அங்கிருந்து அம்மன் புறப்பட்டது. ஏழு ஊர் மக்களும் ஒன்றுகூடி கொழுக்கட்டை, தேங்காய் வயலில் முதல் முறையாக விளைந்த நெல் பயிறு உள்ளிட்ட தானியங்களை சூறையிட்டனர்.

தொடர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குச்சிகளை வைத்து கோலாட்டம் போன்ற வைந்தான் ஆட்டத்தை ஆடினர். இறுதியில் ஒரே நேரத்தில் வானத்தை நோக்கி குச்சிகளை எரிந்து விட்டு திரும்பி பார்க்காமல் கிணற்றில் சென்று தீர்த்தமாடி திருவிழாவை கொண்டாடினர்.

MUST READ