இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 441 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 40,215 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.09 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.72 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,692 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,04,771 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.65% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.83% இதுவரை மொத்தம் 92.32 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,14,242 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.