Homeசெய்திகள்விளையாட்டுஎம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

எம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

-

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையில் 200-வது போட்டி – 120 போட்டிகளில் வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதகின்றன.

எம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 2010, 2011, 2018, 2021 என்று நான்கு முறை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. மேலும், 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

இதுவரை நடைபெற்ற 199 போட்டிகளில் தோனி தலைமையில் 120 வெற்றிகளை பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

எம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இந்த 200வது போட்டியை காண பல ரசிகர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்துள்ளனர்.

MUST READ