Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பில் குண்டு வெடிப்பு😧... விபத்துக்குள்ளான 'கேஜிஃஎப்' வில்லன் நடிகர்!

படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு😧… விபத்துக்குள்ளான ‘கேஜிஃஎப்’ வில்லன் நடிகர்!

-

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சஞ்சய் தத்திற்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சய் தத், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது தமிழில் ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கேடி என்ற படத்தில் சஞ்சய் தத் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படத்தில் பெரிய வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராமல் அங்கு இருந்த குண்டு வெடிக்க, அதில் ஏற்பட்ட விபத்தில் சஞ்சய் தத்தின் முகம், கை, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவர் சீக்கிரத்தில் உடல் நலம் தேறி மீண்டு வருவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

MUST READ