நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டைப் பார்க்க சினிமா பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. ராஜஸ்தான் அணி மேட்சை வென்றது. ஆனால், தனது சிறப்பான பினிஷிங் மூலம் தல தோனி ரசிகர்களின் மனங்களை வென்றார். போராடிக் கிடைக்கும் தோல்வியும் வெற்றி தான் என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில் போட்டி நடைபெற்றால் பல நட்சத்திரங்களை நாம் காணலாம். கடந்த முறை சென்னையில் மேட்ச் நடைபெற்ற போது தனுஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதிஷ், வரலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் காணப்பட்டனர்.
தற்போது உதயநிதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சதீஷ், திரிஷா மற்றும் நடிகை மேகா ஆகாஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று சென்னை அணியின் ஆட்டத்தைக் காண நேரில் வந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது சகோதரர் மணிகண்டன், நடிகை லட்சுமி ப்ரியா என சொப்பன சுந்தரி படக்குழுவும் கலந்துகொண்டனர்.
மலையாள நடிகர்கள் ஜெயராம் மற்றும் பிஜு மேனன் இருவரும் ராஜஸ்தான் அணியின் ஆதரவாளர்களாக காணப்பட்டனர்.