கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தற்போது நிலவரப்படி 44,998 கொரோனா பேர் கொரோன தொற்றால் பாதிக்க பெற்று சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 230 நாட்களைக் காட்டிலும் நேற்று மிக அதிகமான கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் , கடந்த வாரத்தில் இந்தியாவில் மட்டும் 5,555 பேர் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது, இது முந்தைய வாரத்தின் பதிவான எண்ணிக்கையை விட அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தரவுகளைப் பதிந்துள்ளது.
கொரோன தொற்று மீண்டும் பரவுவதால், அடர் புனவல்ல, CEO- Serum Institute of India மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பை மீண்டும் தொடங்கி உள்ளதாக தெரிவித்தது உள்ளார், இந்நிறுவனம் ஏற்கனவே ஆறு மில்லியன் பூஸ்டர் தடுப்புசிகளை போஸ்டர்கள் Covovax தடுப்பூசியை தயாரித்துள்ளது என்றும் அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் ஷாட் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் 220.66 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தரவுகளின் படி தெரிய வருகிறது. கடந்த பிப்ரவரியில் 21.6 சதவீத நோய்த் தொற்றுகள் XBB.1.16 வைரஸால் பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் 35.8% அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அடுத்த 10-12 நாட்களின் தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.