- Advertisement -
திமுகவினரின் கறுப்பு பணம், பினாமி சொத்துகள் பகுதி – 2 ல் வெளியிடப்படும்
திமுகவினரின் சொத்துபட்டியல் என 15 நிமிட வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டான இன்று காலை சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக அமைச்சர்கள் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவினரின் கறுப்பு பணம், பினாமி சொத்துகள் பகுதி – 2 ல் வெளியிடப்படும். 10 தேர்தல்களில் தோற்றாலும் நான் இங்குதான் போட்டியிடுவேன். ஊழலை மொத்தமாக ஒழிக்க சபதம் எடுத்து களமிறங்குவோம்.2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்” எனக் கூறினார்.