Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை- ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை- ஆர்.எஸ்.பாரதி

-

அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை- ஆர்.எஸ்.பாரதி

திமுக 6 முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா? என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

rs bharathi

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. தேர்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. அண்ணாமலை ஆளுமைமிக்கவர் கிடையாது. திமுக ஒரு திறந்த புத்தகம், திமுக ஆட்சியின் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட நிரூபித்திருபார்களா?

திமுகவினரின் குறிப்பிட்ட ஒரு ஊழல் குறித்து அண்ணாமலை வெளியிட்டாரா? அண்ணாமலை தமிழகம் முழுவதுமுள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரடும். எதை பற்றியும் கவலையில்லை, எதையும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறோம். ரபேல் வாட்ச் பில் என ஏதோ ஒரு பேப்பரை காட்டி அண்ணாமலை ஏமாற்றியுள்ளார். அண்ணாமலை எப்படி இவ்வளவுநாள் போலீஸ் வேலையில் இருந்தார் என வியப்பாக உள்ளது. அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என தெரியவில்லை. அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

MUST READ