Homeசெய்திகள்அரசியல்ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்! அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்! அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

-

ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்! அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

திமுக சட்டத்துறை சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

RS Bharathi annamalai

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “டான்சி வழக்கில் முதல்வரை ஆளுநர் விசாரிக்க அனுமதிக்காத போது ஜெயலலிதாவை நீதிமன்றத்திற்கு அழைத்தது திமுக சட்டத்துறை தான். எந்த கட்சிக்கும் இல்லாத மூத்த வழக்கறிஞர்களை கொண்டது திமுக சட்டத்துறை. திமுகவிற்கு சவால் விட்டு எவனும் இதுவரை வென்றது இல்லை. தானாக வந்து ஆட்டுக்குட்டி வலையில் மாட்டிக்கொண்டது. அது தப்பாது.

ரூ.300 கோடி மதிப்புள்ள டான்சி நிலத்தை மீட்டுக் கொடுத்த திமுகவுடன் ஆட்டுக்குட்டி ஆடுகிறது. ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்” என அண்ணாமலையை விமர்சித்தார்

MUST READ