2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற RCB அணி பந்துவீச்சை தேர்வு செய்து. சென்னை அணி நிர்ணயித்த 227 ரன் இலக்குடன் RCB களமிறங்கியது.
RCB அணியில் முதல் ஒரு பவுண்டரியுடன் தொடங்கிய விராட், நான்கு பந்துகளில் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பலம் இழந்த RCB அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 8 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் போது, ஐபிஎல் போட்டி விதிகளை மீறியதற்காக RCB அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் batsman Shivam Dube-ன் விக்கெட்டை விராட் கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். பெங்களுரு அணியின் பந்துவீச்சை அதிரடியாக அடித்துக் கொண்டிருந்த அவர், அரைசதத்துக்குப் பிறகு விக்கெட்டை பறிகொடுத்தார்.
அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த விராட் கோலி, அந்த விக்கெட்டுக்கு ஆக்ரோஷமான மகிழ்ச்சியை மைதானத்தில் வெளிப்படுத்தினார். அது ஐபிஎல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் போட்டி நடுவர், அவருக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தார். அதன்படி போட்டிக் கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் RCB தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாப் 4-க்குள் நுழைந்துவிட்டது.