Homeசெய்திகள்இந்தியாஅண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்? தேர்தல் அதிகாரிகள் சோதனை

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்? தேர்தல் அதிகாரிகள் சோதனை

-

- Advertisement -

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்? தேர்தல் அதிகாரிகள் சோதனை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறை, வாகனங்கள், அவர் உடுப்பி வந்த ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பாஜக தரப்பு இணை பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளார். இந்நிலையில் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதனை வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் இதுகுறித்து உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலை திங்கள்கிழமை காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி சென்றார். ஹெலிகாப்டர் மற்றும் அவர் எடுத்துச் சென்ற பையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், மாதிரி நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஹோட்டலை விட்டு வெளியேறி, காப் தொகுதிக்கு செல்வதாக அறிவித்து, எஸ்எஸ்டி குழுவினர், உத்யாவர் சோதனைச் சாவடியில் மீண்டும் சோதனை நடத்தினர். மதியம் 2 மணியளவில் கடையாலி அருகே உள்ள ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு அண்ணாமலை வந்தடைந்தார், ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடுப்பியில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் பெரும் தொகையை கொண்டு வந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியதை அடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

MUST READ