சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் உதயநிதியின் மாமன்னன் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் இருந்து வெளியான முன்னோட்டம் மற்றும் Scene ah Scene ah பாடல் உள்ளிட்டவை சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில், நடிகர் வடிவேலு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாவீரன் மற்றும் மாமன்னன் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று இந்த படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருவதால் பாக்ஸ் ஆபிஸ் மோதல் சற்று வலுவாக இருக்கும் என்பது உறுதி!