அசோக் செல்வன் நடிப்பில் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன் தமிழின் செல்லப்பிள்ளை நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார். கடந்த வருடம் அசோக் செல்வன் நடிப்பில் பல படங்கள் வெளியாகின.
இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் கூட்டணி முதன்முறையாக ஒரு திரில்லர் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். மலையாள நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்திற்கு போர் தொழில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி அவரின் சினிமா கேரியரில் முக்கியப் படமாக அமைந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
E4 Experiments மற்றும் Eprius Studio உடன் இணைந்து Applause Entertainment நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதைப் பார்க்கும் இது ஒரு போலீஸ் ஸ்டோரி என்று தெரிகிறது.
A mystery is brewing!
Get ready for ‘Por Thozhil’. A taut, edge of the seat investigative thriller Produced by Applause Entertainment in association with E4 Experiments & Eprius Studio, directed by @vigneshraja89, starring @realsarathkumar @ashokselvan @nikhilavimal1 pic.twitter.com/3t9iSbkL0K— Applause Entertainment (@ApplauseSocial) April 18, 2023