Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்

சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலளி முருகேசன். இவர் கள்ளிமந்தயம் கிராமம் வழியே சென்றபோது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை அடுத்து சிறுமி கொடுத்த தகவலின் பேரில் பெற்றோர் கள்ளிமந்தயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். முருகேசன் மீது போக்சோ வழக்குப் பதிந்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.

குற்றவாளி முருகேசனை 32 ஆண்டுகள் சிறையில் தள்ள உத்தரவிட்ட திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் கூடுதலாக அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துள்ளது.

MUST READ