Homeசெய்திகள்தமிழ்நாடுஅவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு

அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு

-

- Advertisement -

அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

appavu

பேரையில் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கிவருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைவிட்டு சென்றது வருத்தமாக உள்ளது. அவை நடவடிக்கையில் இதுவரை ஏன் செய்தீர்கள், செய்யவில்லை என கேட்காத ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

சிறப்பாக நடக்கும் நிகழ்வுகளுக்கு இடையே முதல்வர் பதிலுரையை புறக்கணிக்கப்படுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள், எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இரண்டு மணிநேரம் உணவு இடைவெளிக்கு கூட செல்லாமல் முதலமைச்சர் அமர்ந்திருந்தார். அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவையை விட்டு அதிமுக சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது” எனக் கூறினார்.

MUST READ