Homeசெய்திகள்தமிழ்நாடுமயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

-

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் வைதீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுப்பு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட தையலநாயகியை கவுரவிக்கும் வகையில் நகர மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக செல்கின்றனர்.

அதன்படி தையல்நாயகி வசித்த புதுக்கோட்டை மாவட்டம் கீழசிவல்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் மச்சுவாடி அருகே ஒன்று கூடி அங்கிருந்து பாதகாத்திரையாகவும், மாட்டு வண்டிகளிலும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

பாதகாத்துரை சொல்பவர்கள் கையில் ஒரு ஊன்றுகோல் வைத்திருக்கின்றனர். தாங்கள் வைத்திருக்கும் நகைகளை தையல்நாயகிக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டு ஊன்றுகோளை கோவிலிலேயே விட்டு வருவதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன் மூலம் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது அவர்களது நம்பிக்கை. புதுக்கோட்டையில் இருந்து மாட்டுவண்டிகளிலும் பாதயாத்திரையாகவும் 200 கி.மீ. பயணித்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

MUST READ