Homeசெய்திகள்தமிழ்நாடுதோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு

-

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு
குமரி மாவட்டத்தில் பிச்சிப்பூவின் விலை நான்கு மடங்கு உயர்ந்தது.

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு

தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதேபோல இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடும் வெயிலின் காரணமாக பூந்தோட்டத்தில் பிச்சுப்பூக்கள் செடியிலேயே கருகி விடுவதால் தோவாளை மலர் சந்தைக்கு பிச்சுப்பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ விலை உயர்வு

இதே போல் தொடர் சுபத்தினங்கள் வருவதால் பிச்சுப்பூவின் தேவையும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று சுமார் நான்கு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.

அதன் படி ஒரு கிலோ 1800 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூவை தவிர மற்ற பூக்களின் விலை சராசரியாக இருக்கும்.

MUST READ