Homeசெய்திகள்இந்தியாதெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

-

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

baby

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜி சிகடம் மண்டலுக்கு உட்பட்ட மேட்டவலசா கிராமத்தை சேர்ந்தவர் சாத்விகா. 18 மாத குழந்தையான இவர், நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதிக்குள் நுழைந்த தெரு நாய் கூட்டம் குழந்தையை கொடூரமாக தாக்கியது. இதில் அந்த குழந்தையின் உடலில் படுகாயங்கள் ஏற்பட்டன.

சாத்விகாவின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு சென்ற பெற்றோர், உடனடியாக நாய்களை விரட்டிவிட்டு சாத்விகாவை அருகில் உள்ள ராஜம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சாத்விகா பரிதாபமாக உயிரிழந்தார்.

MUST READ