சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது தென்னிந்திய அளவில் ஸ்டார் நடிகராக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் ‘லியோ’ படம் வெளியான பிறகு அவருக்கு பான் இந்தியா ஸ்டார் அங்கீகாரம் கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பரவலாக தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் விஜய் அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகம் நிலவி வருகிறது.
சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சௌத்ரியின் மகன்களான நடிகர்கள் ஜீவா மற்றும் சித்தன் ரமேஷ் இருவரும் பெரிய இயக்குனர்களை வலை வீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து இருவரும் பல்வேறு பேட்டிகளில் கூட பேசியுள்ளனர். எனவே விஜயின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கன்ஃபார்ம். எந்த இயக்குனர் என்பது மட்டும் இன்னும் சரியாக தெரியவில்லை. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது