Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம்

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம்

-

- Advertisement -

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ல் வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம்  அறிவிப்பு | DGE - Higher Secondary Second Year (+2) Result (2020-2021) -  hindutamil.in

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்களும் , 4,33,436 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதலமைச்சருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும், திட்டமிட்டப்படி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

MUST READ