Homeசெய்திகள்சினிமாஇந்தியில் ரீமேக் ஆகும் 'பரியேறும் பெருமாள்'... இயக்குனர் ஆகும் பிரபல தயாரிப்பாளர்!

இந்தியில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’… இயக்குனர் ஆகும் பிரபல தயாரிப்பாளர்!

-

பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான பெரியேறும் பெருமாள் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலே தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகப்போவதை உறுதி செய்துவிட்டார். படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

அந்தப் படத்தை அடுத்து தான் மாரி செல்வராஜுக்கு தனுஷ் மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிந்தாந்த் சதுர்வேதி  இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ