Homeசெய்திகள்சென்னைநண்பனை காப்பாற்றச் சென்றபோது ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு..

நண்பனை காப்பாற்றச் சென்றபோது ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு..

-

சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்றச் சென்ற போது மற்றொரு ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் ஆசைதம்பி, கௌதம் உள்ளிட்ட நண்பர்கள் சிலர் பயணித்துள்ளனர். அப்போது ஆசைத்தம்பி என்பவர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.  பின்னர்  ரயில் சைதாப்பேட்டை அடைந்ததும் உடன் வந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற தண்டவாளத்திலேயே ஓடிச் சென்றனர். 

மின்சார ரயில்

அப்போது எதிர்பாராத விதமாக  கடற்கரை நோக்கி வந்த மற்றொரு மின்சார ரயில்  மோதியதில் கௌதம் என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசைத்தம்பி காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பனை காப்பாற்றச் சென்றபோது, ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ