நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் அப்பாவை வைத்து புதிய விளம்பர படம் இயக்கியுள்ளார்.
பாலிவுட் பாட்ஷாவாக வலம் வருகிறார் ஷாருக் கான். உலக அளவில் புகழ்பெற்ற ஒரு இந்திய நடிகர் என்றால் அது ஷாருக் கான் என நாம் கூறலாம்.
தற்போது ஷாருக் கான் அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் ஷாருக்கான் தற்போது தனது மகன் ஆரியன் கான் இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கான் மகன் போதைப் பொருள் வழக்கில் விசாரிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதற்கிடையில் கரண் ஜோகர், ஆர்யன் கானை வைத்து புதிய படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் நடிப்பில் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை, இயக்கத்தில் தான் ஆர்வம் இருக்கிறது எனவும் ஆர்யன் தெரிவித்துவிட்டார்.
தற்போது அப்பா ஷாருக் கானை வைத்து ஆர்யன் கான் புதிய விளம்பர படம் இயக்கி உள்ளார். மேலும் அந்த விளம்பர நிறுவனத்தின் இணை இயக்குனராகவும் ஆர்யன் இருக்கிறாராம். இதன் மூலம் அவருக்கு இரு பக்கமும் லாபம் கிடைத்துள்ளது.