நடிகர் ஜீவா முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவின் நம்பிக்குரிய இளம் நடிகர் ஜீவா, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட சில வெற்றி படங்கள் கொடுத்த ஜீவா தற்போது பல தோல்வி படங்களால் சறுக்கி வருகிறார்.
அவருக்கு கம்பேக் ஆக ஒரு சூப்பர் ஹிட் படம் தேவை என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஜீவா. கடைசியாக நடித்த ‘வரலாறு முக்கியம்’ படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
தற்போது மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜீவா சொந்தமாக புதிய படம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜீவாவின் அப்பா ஆர்பி சௌத்ரி தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது ஜீவா அவரது அப்பா இல்லாமல் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜீவாவே தயாரிக்கிறார். சிவா மனசுல சக்தி படத்தை அடுத்து மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.
ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அந்தப் படத்தை எடுத்து அவர் ஜீவாவுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.