- Advertisement -
5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 30, மே ஒன்றாம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர், சேலத்தில் மே ஒன்றாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.