- Advertisement -
தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே.1-ல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மே.1-ம் ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மே.1-ம் தேதி விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.