சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு
சென்னையில் கடந்தவாரம் முழுவதும் ஏறு முகத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.44,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,615-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.