“சிஎஸ்கே அணியில் ஒரு தமிழன் கூட கிடையாது” – அன்புமணி ராமதாஸ்
எனக்கு தோனியை ரொம்ப பிடிக்கும், ஆனால் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழன் கூட கிடையாது, இது எவ்வளவு பெரிய வருத்தம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் உரிமை, அனைவருக்கும் வளர்ச்சி என்ற செயல்திட்டத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நானும் சிஎஸ்கே ஆதரவாளன் தான். தோனிக்கு விசில் போடு, ஆனால் அந்த அணியில் ஒரு தமிழன் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம்தான். 20 வீரர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு தமிழனாவது இருந்திருக்க வேண்டும். பேரிலேயே சென்னையை வைத்து கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நிச்சயம்? மது இல்லாமல் இளைஞர்கள் வாழ முடியாது என்ற சூழ்நிலயை உருவாக்கியது தான் திராவிடமாடல்.
திராவிட மாடல்- பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகள் உழைப்பாளிக்கானது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வேலை என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்பது சினிமா துறையும் சாராய துறையும் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு துறை மட்டும் தான் வருடத்திற்கு கோடான கோடி பணத்தை பெருக்கி உள்ளது” எனக் கூறினார்.