
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில், நேற்று (மே 03) மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை நடத்தியது.
6 மாதங்களில் 500 விளம்பர பலகைகள் அகற்றம்- அமைச்சர் கே.என்.நேரு
இந்த பேரணிக்கு எதிராக மற்றொரு தரப்பு மாநிலத்தின் சில பகுதிகளில் பேரணி நடத்தியது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அதேபோல், மோரே கிராமத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில், வாகனங்கள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் கட்டிடங்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
வன்முறை வெடித்த நிலையில், பல்வேறு மாவட்டங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் போதுமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தென்பட்ட வெள்ளை நாகம்
இதனிடையே, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலவரம் குறித்தும், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.