Homeசெய்திகள்தமிழ்நாடு"வங்கக்கடலில் புயல் உருவாகிறது"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

"வங்கக்கடலில் புயல் உருவாகிறது"- வானிலை ஆய்வு மையம் தகவல்!
File Photo

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 06) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். மே 7- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. அதைத் தொடர்ந்து, மே 8- ஆம் தேதி வாக்கில் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

வட இத்தாலி: வரலாறு காணாத வெள்ளம்; முக்கிய நகரம் மூழ்கியது

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக மேலும் வலுப்பெறும். தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்காலில் இன்று (மே 04) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம்

குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் மே 7- ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ