ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஒருபுறம் ஜீவியும் மறுபுறம் ஐஸ்வர்யா ராஜேஷூம் காணப்படுகின்றனர். இந்த புதுமையான ஃபர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த படத்தை புரொமோட் செய்யும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜிவி இருவரும் மாறி மாறி தங்களை கலாய்த்து கொண்டு பதிவுகளும் வெளியிட்டு வருகின்றனர்.
காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. No