Homeசெய்திகள்க்ரைம்திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

-

திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்

Tirupati

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள் ஆட்சி செய்த இந்த கோட்டையில் தான் சென்னை பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் முதல்முறையாக கிழக்கு இந்திய கம்பெனியை தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கோட்டையாகும்.

இந்த கோட்டையில் புதையல் இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் புதையல் எடுப்பதற்காக முயற்சி மேற்கொண்டனர். கோட்டைக்கு அருகே புதையல்  எடுப்பதற்கு முன்பு பூசாரியை கொண்டு பூஜை செய்வதற்காக கொள்ளை கும்பல் காத்திருந்தது.

ஆனால் பூசாரி கடைசி வரை வரவில்லை. அதற்கு பதில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஏழு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அந்தக் கும்பல்  புதையல் எடுக்க வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரையும்  கைது செய்த சந்திரகிரி போலீசார் அவர்களிடம் இருந்த துளையிடும் இயந்திரம், மண்வெட்டி, சுத்தி, கடப்பாறை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த மேலும்  முழு விவரங்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

MUST READ