Homeசெய்திகள்சினிமாஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் தமிழ் நடிகர் ஜீவா!

ஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் தமிழ் நடிகர் ஜீவா!

-

ஆந்திர முதல்வரின் வாழ்க்கைப் படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ஜீவா தற்போது சில படங்களை கைவசம் வைத்துள்ளார். சினிமாவில்  தனக்கான தனி இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில்  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை பயோபிக் ஆக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் நடிகர் ஜீவா தான் ஜெகன்மோகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட துல்கர் சல்மான் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஆந்திர முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது அரசியல் வரலாறு திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு சுவாரசியமாக இருப்பதால் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

தமிழ் நடிகரான ஜீவா ஆந்திர முதல்வரின் பயோபிக் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பா மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. தற்போது ஜெகனின் வாழ்க்கை யாத்ரா 2 என்ற பெயரில் உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய அதே குழுவினர் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

MUST READ